திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை

67பார்த்தது
திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை
கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உட்பட 8 இடங்களில் நேரலை ஒளிப்பரப்புடன் கொண்டாடப்பட உள்ளது. தென் கைலாய பக்தி பேரவையின் ராஜ் பிரகாஷ் அவர்கள் கூறியதாவது:
தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களுடன் கூடிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் வழியாக சுமார் 35, 000 கி. மீ பயணிக்கும் வகையில் யாத்திரை அதில் ஒரு ரதம், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிக்கு(பிப். 22) வருகை தர உள்ளது. இதை தொடர்ந்து கும்பகோணம் (பிப். 23 - 25), தஞ்சாவூர் (பிப். 26), அரியலூர் (பிப், 27, 28), பெரம்பலூர் (பிப். 29), முசிறி(மார்ச் 1), குளித்தலை (மார்ச் 2), ஆகியஊர்களுக்கு பயணித்துவிட்டு மார்ச் 3 மற்றும் 4-ம் தேதி திருச்சி நகரின் பல்வேறு இடங்களுக்கு வலம் வர உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி