திருச்சி மாவட்டம் மணப்பாறையை பண்ணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடாஜலபதி கரடு வனப்பகுதியில் மயில், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் இந்த வனப்பகுதிக்கு உட்பட்ட மரங்களை சுற்று வட்டார பொதுமக்கள் பச்சையாகவோ அல்லது காய்ந்த நிலையிலோ வெட்டி எடுத்து செல்ல அனுமதியில்லை. மேலும் அறிவுறுத்தலை மீறி சட்டவிரோதமாக மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.