மூச்சுத் திணறி உயிரிழந்த மூன்று மாத குழந்தை

561பார்த்தது
மூச்சுத் திணறி உயிரிழந்த மூன்று மாத குழந்தை
திருச்சி தென்னூர் அண்ணா நகர் சின்னசாமி நகர் பொதுச் சேர்ந்தவர் ரியாஸ். இவரது மனைவி ஷர்மிளா. இந்த தம்பதிக்கு முகமது இப்ரான் என்ற மூன்று மத ஆண் குழந்தை உள்ளது இந்த குழந்தைக்கு திடீர்னு மூச்சு திணறல் ஏற்பட்டது உடனே பெற்றோர் குழந்தையை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை முகமது இப்ரான் பரிதாபமாக இறந்து விட்டான். இது குறித்து அவர் தாயார் ஷர்மிளா தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்