குடும்பத்தகராறில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

80பார்த்தது
குடும்பத்தகராறில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (34). இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியலட்சுமி (25) என்பவருடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாக்கியலட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து பிரபாகரன் அவரது மனைவியை அழைத்து வர அங்கு சென்றுள்ளார். ஆனால் பாக்கியலட்சுமி, பிரபாகரனுடன் வர மறுத்துள்ளார். இதனால் சம்பவத்தன்று பிரபாகரன் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த வரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை எடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி