திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள மிலிட்டரி கேன்டீன் எதிரில் ஹாட் சிக்கன் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் ஊழியர்கள் வழக்கம் போல இன்று மாலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், திருச்சி மாவட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீயின் காரணமாக உணவகத்தில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் சமையல் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுதொடர்பாக கண் டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்தது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.