திருச்சி பாலக்கரை எடத்தெரு பிள்ளைமா நகரை சேர்ந்தவர் செபாஸ்டின். இவரது மனைவி லிடியா சகாய ஷீலா (வயது 30) கர்ப்பிணியான இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனைக்கு சென்று இருந்தார். அப்பொழுது அரசு மருத்துவமனை வார்டு வளாகத்தில் இருந்த போது இவரின் செல்போனை மர்ம ஆசாமி ஒருவர் திருடி சென்று விட்டார். இது குறித்து விடியா திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி அரசு மருத்துவமனை வளாகப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஹரிகரன் (வயது 23) என்பதும், இவர் தான் செல்போனை திருடினார் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்துள்ளனர்