திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40). வியாபாரியான இவர் தனியார் வங்கி மற்றும் மகளிர் குழு மூலம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அவர், எலி மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.