திருச்சிக்கு சுற்றுலா தலமாக பறவைகள் பூங்கா தயாராகிவருகிறது

79பார்த்தது
திருச்சிக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும், மாவட்டத்தின் கூடுதல் சுற்றுலா தலமாகவும் பறவைகள் பூங்கா தயாராகி வருவதாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், ரூ. 13. 70 கோடியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா கட்டமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமைச்சர் கே. என். நேரு, நேரில் வருகை தந்து பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். எஞ்சியுள்ள பணிகளை விரைவாகவும், சிறப்பான முறையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி