திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 1540 இன்று கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் ஏராளமான தங்களது முதல் நாள் பள்ளிக்கு செல்ல ஆர்வமாக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர். திருச்சி காட்டூர் லிட்டில் பிளவர் பள்ளியிக்கு வரும் மாணவர்களுக்கு ரோஜா பூக்களை ஆசிரியர்கள் கொடுத்து வரவேற்றனர். மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு குழந்தைகளுக்கு சாக்லேட்கள் இனிப்புகளும் கொடுக்கப்பட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களை உற்சாகப்படுத்தி வரவேற்பு அளிதத்தனர்.