துறையூர் அருகே லாரி மீது பைக் மோதி விபத்தில் வாலிபர் பலி

79பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒக்கரை கிராமத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.

வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்தி, நவீன் இருவரும் மன்பறை கிராமத்தில் உள்ள சோலார் பேனலில் மின்சாரம் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்

இந்நிலையில் பணி முடிந்து நேற்று இரவு இருவரும் இரு சக்கர வாகனத்தில் வைரிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஒக்கரை கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கார்த்தி வயது 26 என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் பின்னால் அமர்ந்திருந்த நவீன் என்ற வாலிபர் தலையில் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உப்பிலியபுரம் போலீசார் கார்த்தியின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த நவீன் துறையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இந்த விபத்து சம்பவம் குறித்து உப்பிலிபுரம் காவல்நிலையை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி