துறையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி இவர் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி அன்று வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருக்கும்போது விளக்கில் இருந்து தீ அவருடைய புடவையில் பற்றியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து உயிரிழந்த ஜோதிலட்சுமியின் கணவர் சந்திரசேகர் அளித்த புகார் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.