மணப்பாறை: பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்ற பெண் கைது

60பார்த்தது
மணப்பாறை: பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்ற பெண் கைது
மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் கூலிப் விமல் பாக்கு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. 

இதனை அடுத்து மணப்பாறை ஜீவா தெரு பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த பெட்டிக்கடை ஒன்றில் மீனாட்சி என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். 

இதனை அடுத்து அவரிடம் இருந்து 200 ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி