பச்சமலை மஙகளம் அருவியில் தண்ணீர் வரத்து

77பார்த்தது
துறையூர் பச்சமலையில் அமைந்துள்ள மங்களம் அருவியில் தண்ணீர் வரத்து ஆரம்பித்தது. வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் அருவிக்கு தண்ணீர் வரத்தானது ஆரம்பித்தது இந்த தண்ணீர் குறைந்த பட்சம் 100 நாட்கள் வரும் தண்ணீர் வரத்தை தெரிந்து கொண்ட சுற்றுலா பயணிகள் கடந்த இரண்டு தினங்களாக மங்கலம் அருவிக்கு தங்கள் வாகனங்களில் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர் இந்த தண்ணீர் பல்வேறு தாவரங்களின் வேர்களில் பட்டு வருவதால் மூலிகை தண்ணீராக கருதப்படுகிறது. அதனால் இந்த மூலிகை தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் சோபனபுரம் டாப் செங்காட்டுப்பட்டி வழியாக மங்களம் அருவி சென்று வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி