திருச்சியில் ஆகஸ்ட் 17ஆம் தேதி வேளாளர் எழுச்சி மாநாடு. எல்லா வேளாளர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும் – மாநாட்டுத் தலைவர் பண்ணை சொக்கலிங்கம் பேட்டி. அனைத்து வேளாளர், வெள்ளாளர்கள் உட்பிரிவு சங்கங்கள் மற்றும் வ.உ.சி பேரவைகளின் ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் பண்பாட்டு நலச்சங்கம் சார்பாக திருச்சியில் வேளாளர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் திருமண மண்டபத்தில் சிவானி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
வருகிற ஆகஸ்ட் 17ஆம் தேதி 42 வேளாளர் அமைப்புகள் ஒன்றுகூடி மாநாடு நடைபெற உள்ளது. சமுதாயம் மேம்படவும் பல்வேறு பணிகள், வேளாளர் நாகரீகம் மீண்டும் தலைதூக்க ஒன்றுபட நடைபெறும். சைவ வேளாளர் சமுதாயத்திற்கு வேண்டிய அனைத்து சலுகைகளையும் எதுவாக இருந்தாலும் அரசு வழங்க வேண்டும். வரும் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் நாங்கள் போட்டியிட தயாராக உள்ளோம். தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து மாநாட்டில் முடிவெடுக்கப்படும். 42 அமைப்புகளும் இணைந்து ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் பண்பாட்டு நலச்சங்கம் என துவக்கப்பட்டுள்ளது. எல்லா வேளாளர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.