ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் குமாரபாளையத்திற்கும் திருச்சி ரயில் நிலையத்திற்கு இடையே உடையாபட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போதும் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த நபரின் உடலை மீட்ட திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.