திருச்சி நடுகுறிச்சி தெருவில் வசித்து வருபவர் கிரன்குமார் சம்பவத்தன்று இரவு இவர் தனது இருசக்கர வாகனத்தை அங்குள்ள கடையின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரிய வந்தது. யாரோ மர்மநபர்கள் அதை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து புகார் பெற்ற கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.