இரண்டு டூவீலர்கள் மோதி விபத்து ஒருவர் காயம்

492பார்த்தது
இரண்டு டூவீலர்கள் மோதி விபத்து ஒருவர் காயம்
திருச்சி அருகே உள்ள குண்டூர் மகேஷ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவர் தனது இருசக்கர வாகனத்தில் அய்யம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது இவருக்கு எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த ஐயப்பனுக்கு இடதுகை முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்த புகார் பேரில் விபத்தை ஏற்படுத்தி இருசக்கர வாகன ஒட்டியின புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி