திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவர் திருச்சி மங்களன் மங்கள் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார் சம்பவம் நடந்த நேற்று இரவு 10: 30 மணி அளவில் பணி முடிந்து ஆண்டார் வீதி பகுதியில் நாகராஜ் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மர்ம வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்து வந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மற்றொரு வாலிபர் ஒருவர் மர்ம வாலிபருடன் இணைந்து கொண்டு திடீரென நாகராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இது குறித்து நாகராஜ் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் சிந்தாமணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த
சூர்யா என தெரியவந்தது இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.