திருச்சி எலக்ட்ரிசிட்டி எம்பிளாயீஸ் மாநில செயற்குழு கூட்டம்

85பார்த்தது
திருச்சி எலக்ட்ரிசிட்டி எம்பிளாயீஸ் மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்றும் இன்றும் நடக்கிறது. கூட்டத்திற்கு பெடரேஷன் தலைவர் பாஸ்கர்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஏ. செக்கிழார் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மின் கட்டண உயர்வை அதிகப்படுத்தக்கூடிய ஒன்றிய அரசால் அழுத்தம் கொடுக்கப்படும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மத்திய தொழிற்சங்கம் அறைக்கூவலுக்கு ஏற்ப தொழிலாளர் நலச்சட்டங்களை 44 இலிருந்து 4 ஆக குறைத்ததை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாரப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20.05.2023 நடைபெற உள்ள ஒருநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி