திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

51பார்த்தது
திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக ரகுநாதன், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காங்கிரஸ் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

பின்னர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜென்னி பிளாசாவில் அமைந்துள்ள அடைக்கலராஜ் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜவகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், சிக்கல் சண்முகம், மாவட்ட செயலாளர் அல்லூர் பிரேம், பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லூர் சுரேஷ், நிர்வாகிகள் கருணாகரன், மெய்யநாதன், சந்துரு, இளைஞர் காங்கிரஸ் ரமேஷ் சந்திரன், பீமநகர் காசிம், ஜாகிர் உசேன், அப்ரார், ரூபிஷா, நித்யஸ்ரீ, கிஷோர் குமார், வசந்த் குமார், வான்மதி, அப்பாஸ், அலாவுதீன், காஜா அஜாவுதீன், நிவேதா மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி