துறையூர் அருகே தீக்கு இரையான திருநங்கை வீடு

61பார்த்தது
துறையூர் அருகே தீக்கு இரையான திருநங்கை வீடு
துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் திருநங்கைகளான பிரசாந்தினி, தக்ஷனா, ஸ்ரீதேவி, மார்டினியான ஆகிய நால்வரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அவர்களுடைய வீட்டிலிருந்து கரும்புகை வருவதாக உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு நிலையத்தினர் தண்ணீரை பீச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சேலைகள், கட்டில், மெத்தை ஆகியவை தீயில் எரிந்து சாம்பலாகின. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்கச் செயின், வெள்ளிப் பொருட்கள் அதிர்ஷ்டவசமாக தப்பின. இருப்பினும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகியிருப்பதாக திருநங்கைகள் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி