திருவெறும்பூர்: வழங்கிய தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

80பார்த்தது
திருவெறும்பூர்: வழங்கிய தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் நியாயவிலை கடையில் திருடியவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ரேஷன் கடையில், கடந்த 2003-ம் ஆண்டு புதுக்கோட்டை இழுப்பூர் பெருஞ்சுனை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் என்பவர் ரேஷன் பொருட்களை திருடியதாக, நவல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் அடிப்படையில் நீதிமன்றம் சண்முகசுந்தரத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஒரு வருடம் ஆறு மாதம் தண்டனை என தீர்ப்பு வழங்கியது. 

அதன் பிறகு சண்முகசுந்தரம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து மீண்டும் கடந்த ஏழாம் தேதி சண்முகசுந்தரத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ஒன்றரை ஆண்டு தண்டனையை குறைத்து 10 மாதம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நவல்பட்டு போலீசாருக்கு சண்முகசுந்தரம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நவல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியராஜ் தலைமையிலான போலீசார் அன்னவாசல், சத்திரம் கிராமத்தில் பதுங்கி இருந்த சண்முகசுந்தரத்தை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி