துறையூரில் சிலிண்டர் வெடித்து பத்து கடைகள் தீயால் சேதம்

75பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்ன ஏரிக்கரையில் உள்ள உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து பத்துக்கு மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம் மூன்று இருசக்கர வாகனங்கள் தீயில் எறிந்து சேதம் ஆகின 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதம்.

துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்ன ஏரிக்கரையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன இதில் அங்கமுத்து என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் நேற்று நள்ளிரவு திடீரென சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து அருகில் இருந்த டயர் கடை செருப்பு கடை மற்றும் டைலர் கடை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி நாசமாயின. இதில் மூன்று இரு சக்கர வாகனங்கள் தீயில் சேதமடைந்தது. சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இந்த தீ விபத்து சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. உணவகத்தில் சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் என தெரிய வருகிறது. பேருந்து நிலையம் எதிரே திடீரென சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் துறையூர் பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி