திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட திருச்சி சாலை பெரம்பலூர் சாலை ஆத்தூர் ரோடு ஆஸ்பத்திரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக காணப்படுகிறது அலுவலக வேலைக்கு செல்வோர் அரசு பணிக்கு செல்வோர் பள்ளி மாணவ மாணவிகள் காலை நேரங்களில் அதிகமாக சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது இதனால் அந்த வேலையிலும் பள்ளி விடும் மதியம் நான்கு முப்பது மணி அளவில் கூடுதலாக போக்குவரத்துக் காவலர்களை நியமித்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமென துறையூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.