புலிவலம்- வார்த்தைச் சண்டை தொடர்பான தகராறு ஒருவர் மீது வழக்கு பதிவு

259பார்த்தது
புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் மற்றும் பெல்ஸ் என்கிற தினேஷ் இருவரும் ஒரே தெருவில் வசிக்கிறார்கள் இந்நிலையில் நேற்று பெல்ஸ் என்கிற தினேஷ் என்பவர் சரவணன் வீட்டில் அருகே நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சரவணன் அவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் பெல்ஸ் என்கிற தினேஷ் சரவணனை தாக்கி உள்ளார் இதில் சிறிய அளவில் காயமடைந்த சரவணன் புலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய தினேஷ் மீது வழக்கு பதிந்து புலிவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி