அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நடந்து சென்றவர் உயிரிழப்பு

678பார்த்தது
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நடந்து சென்றவர் உயிரிழப்பு
துறையூர் உயர்நிலைப்பள்ளி சாலை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் இவர் சம்பவம் நடந்த நேற்று பகளவாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் கீழே விழுந்த செந்தில்குமார் தலையில் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்களால் அவர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து புலிவலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி