திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாரத்தை சேர்ந்த கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான ஆதனூர், நாகலாபுரம், கீரம்பூர்,. கண்ணனூர் பாளையம், மருவத்தூர், வண்ணாடு, பகள வாடி கிராமங்களைச் சேர்ந்த 20 விவசாயிகள், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை யின் சார்பில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்ட சந்தன் பாரா வேளாண் அறிவியல் நிலையத்திற்கு 5 நாள் பட்டறிவு பயணமாக- வேளாண் விளைப் பொருட்களை சந்தைப்படுத்தும் உத்திகள், சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிடல், தரமான வாங்குபவர்களை அடையாளம் காணுதல் - என்னும் தலைப்பில், திருச்சிராப்பள்ளி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை இணை இயக்குனர் ஆனந்த செல்வி அறிவுறுத்தலின்படி துறையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரவி, வேளாண் அலுவலர் கமல் ஆகியோர் அனுப்பி வைத்தனர். பட்டறிவு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன், சரண்யா விவசாயிகளுடன் சென்றுள்ளனர், மேலும் கட்டப்பனா இடுக்கி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மயிலாடும்பாரா நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றிற்கு சென்று திரும்ப திட்டமிட்டுள்ளனர்.