துறையூர் அருகே உள்ள பச்சைமலை புத்தூரை சேர்ந்த ரோகிணி என்ற மாணவி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்ஐடியில் தேர்வாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று பச்சை மலைக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சென்ற அமைச்சர் உதயநிதி அவர்கள் ரோகினியை நேரில் சென்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் நேரு அன்பில் மகேஷ் சிவசங்கரன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.