திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பி மேட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 14ஆம் நாளான நேற்று மாரியம்மன் திருத்தேரில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பி மேட்டூர் மற்றும் மாரியம்மன் திருக்கோவில் குடிப்பாட்டு பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பால்குடம் எடுத்தல் அழகு குத்தி வீதி விழா வரும் நிகழ்வும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 15ஆம் நாளான இன்று குடி விடுதலும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.