மணப்பாறை: திமுக அரசை விமர்சித்து விஜயபாஸ்கர் பேச்சு

62பார்த்தது
மணப்பாறை: திமுக அரசை விமர்சித்து விஜயபாஸ்கர் பேச்சு
மணப்பாறை அருகே வளநாடு கைகாட்டியில் நடந்த தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். இதில் 3000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய விஜயபாஸ்கர்: விடியா மாடல் முதல்வர் ஸ்டாலின் நமது ஆட்சியில் கொடுத்த அனைத்து முத்தான திட்டத்தையும் முடித்து வைத்தார். இவருக்கா? உங்கள் ஓட்டு என சிந்தித்து வாக்களியுங்கள். 

படுத்து கொண்டே தானும் ஜெயித்து 200 தொகுதிகளுக்கும் மேல் வென்றெடுத்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர். அவரைத் தொடர்ந்து பல மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து அனைவரையும் எம்பிபிஎஸ் ஆக்கி அழகு பார்த்தவர் எடப்பாடியார். மேகம் கருக்கும் சூரியன் மறைக்கும் இலை தளிர்க்கும் நமது ஆட்சி வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

அடுத்த மே மாதம் ஆட்சி அமையும் இதே மேடையில் நாம் வேறு லெவலில் உட்கார்ந்திருப்போம். இன்னும் 10 மாதங்களில் அதிமுக ஆட்சி அமைக்கும் இது உறுதி. அம்மா அரை பவுன் தங்கம் கொடுத்தார்கள் எடப்பாடியார் ஒரு பவுன் கொடுத்தார்கள் ஸ்டாலின் என்ன கொடுத்தார்? என பேசினார்.

தொடர்புடைய செய்தி