துறையூர்: மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவன் கைது

64பார்த்தது
துறையூர்: மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவன் கைது
துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் இவருக்கும் பிரவீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக காதல் திருமணம் நடைபெற்றது குழந்தைகள் இல்லை. இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான தினேஷ் மது அருந்துவதற்கு பணம் கேட்டு பிரவீனாவை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். 

அதேபோல் சம்பவம் நடந்த நேற்று பிரவீனாவிடம் அவர் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் வாய் தகராறு ஏற்பட்டு இரும்பு குழாயால் பிரவீனாவை தினேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பிரவீனாவை தாக்கிய கணவர் தினேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி