திருவரம்பூர் மலைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் தனது தந்தையான சுப்பிரமணியை அழைத்துக்கொண்டு ஒரே இருசக்கர வாகனத்தில் திருவரம்பூர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் காயமடைந்த தந்தை மகன் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இந்த விபத்து சம்பவம் குறித்த புகார் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.