திருச்சியில் லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த குடும்பத்தினர்

58பார்த்தது
திருச்சியில் லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த குடும்பத்தினர்
திருச்சி மாவட்டம் அண்ணாநகர் போலீஸ் குவார்ட்டர்ஸ் அருகே வசித்து வரும் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சூர்யகலா மற்றும் அவரது தகப்பனார் பார்த்திபன் ஆகியோர் இணைந்து பணம் தேவை இருக்கும் பெரிய முதலாளிகளிடம் தொடர்பு கொண்டு லோன் பெற்று தருவதாக கூறி பலரிடம் ஏமாற்றி இன்சூரன்ஸ் செலுத்த வேண்டுமென்று கூறி பல கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக திருச்சி மாவட்டம் பொருளாதார குற்ற பிரிவில் காவல்துறையில் இந்திய மக்கள் பன்னோக்கு முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று புகார் அளிக்கப்பட்டது. 

அந்த புகாரில் ஏமாற்றப்பட்டவர்களின் விவரமும் போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்து மேலும் பல குடும்பங்களை அவர்களிடம் ஏமாறாமல் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்சினையை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜே.பி. மற்றும் இந்திய மக்கள் முன்னேற்ற கழக மாநில தலைவர் சதீஷ் குமார் ஆகியோர் தலைமையில் இன்று திருச்சி மாநகர குற்றப்பிரிவில் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி