திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குவலக்குடி ரிச் அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி ஜான் இவர் தனக்கு சொந்தமான வீட்டின் மேல்மாடியில் இளவரசன் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார் இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று இளவரசன் சின்னசாமி ஜானின் வீட்டிற்கு முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார்.
இது குறித்து பாதையை மரித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளீர்கள் என சின்னசாமி ஜான் இளவரசனிடம் கேட்டபோது இருவர்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு இளவரசன் அவர் தலைமைச் சேர்ந்த ராபர்ட் அய்யனார் குமார் ஆகிய நால்வரும் சேர்ந்து சின்னசாமி ஜானை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் திருவரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.