ஒவ்வொரு திங்கட்கிழமையும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது திருச்சி பெரிய கடை வீதியில் வாடகைக்கு செயல் பட்டு வந்த தியாகராஜன் என்பவரது கடையில் ரவுடி ஒருவர் அத்துமீறி நுழைந்து பொருட்களை திருடி சென்றதாகவும். இது குறித்த புகார் அளித்த தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே தனது கடையில் திருடப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க கோரியும் சம்பந்தப்பட்ட ரவுடியை கைது செய்யக் கோரியும் தியாகராஜன் தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு தீ குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தார். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து கலெக்டரிடம் புகார் அளிக்க கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் தம்பதியினர் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர் இதனால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.