திருச்சி மாவட்டம் துறையூரில் பாஜக சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் திரெங்கா யாத்திரை நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் சிந்தூர் ஆபரேஷன் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் நாட்டில் இருந்த பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இந்திய ராணுவத்தால் அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆபரேஷன் சித்தூர் வெற்றியை இந்தியா முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் துறையூரில் பாஜக சார்பில் திரெங்கா யாத்திரை நடைபெற்றது துறையூர் சிலோன் ஆபீஸ் பகுதியில் தொடங்கிய இந்த யாத்திரை பெரிய கடை வீதி பாலக்கரை திருச்சி ரோடு வழியாக துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ராணுவத்தினர் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். யாத்திரையில் கலந்து கொண்ட பாஜகவினர் இந்திய ராணுவத்திற்கும் பாரத பிரதமர் மோடிக்கும் ஆதரவாகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியவாறு யாத்திரையாக சென்றனர்.