துறையூரில் அருண் நேரு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

70பார்த்தது
துறையூரில் அருண் நேரு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு அவர்கள் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த அம்மாபட்டி சிங்களாந்தபுரம் காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மாவட்ட சேர்மேன் தர்மன் ராஜேந்திரன் துறையூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வீரபத்திரன் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி