துறையூர் பச்சைமலை பகுதிக்கு புதிய வழித்தடத்திற்கான பேருந்தை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு துவக்கி வைத்தார். பச்சைமலை பகுதியில் பெரிய பழமலை சின்ன பழமலை ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வேண்டி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் அதைத்தொடர்ந்து அவ்வழித்தடத்தில் புதிதாக இயக்கப்பட்ட பேருந்தை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.