சாலை இரும்பு தடுப்பில் மோதி கீழே விழுந்த இளைஞர் சாவு

67பார்த்தது
சாலை இரும்பு தடுப்பில் மோதி கீழே விழுந்த இளைஞர் சாவு
துறையூர் அருகே சாலை குறுக்கே போலீசாரால் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில்(பேரிகாட்) மோதிய இளைஞர் உயிரிழந்தார்.



துறையூர் அருகேயுள்ள அடைக்கம்பட்டியைச் சேர்ந்தவர் குமார் மகன் நடராஜ் (22). இவர் துறையூரில் உள்ள சலூன் கடையில் வேலை செய்கிறார். நேற்று அவர் வேலை முடித்து விட்டு டூவீலரில் சென்ற போது நாகலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை குறுக்கே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் நிலைத்தடுமாறி மோதி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த. நடராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் நடராஜன் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடராஜ் தந்தை குமார் அளித்த புகார் பேரில் துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி