மாண்புமிகு உச்ச நீதிமன்றம் புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் ஆலோசனைப்படி இன்று 08. 06. 2024 காலை துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியும் ஆகிய திரு M. ஜெய்சங்கர் அவர்களின் தலைமையில் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது அதில் துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு R. சத்தியமூர்த்தி மற்றும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நர்மதா ராணி ஆகியோரின் முன்னிலையில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து சமரசமாக பேசப்பட்டது. சுமார் 150 வழக்குகளுக்கு மேல் கோப்பிற்கு எடுக்கப்பட்டு 28 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது மற்றும் வங்கி வாராக் கடன்கள் 64 வழக்குகள் முடிக்கப்பட்டது. சமரச தீர்வு மொத்த வழக்கு 92, தொகையாக ரூபாய் 2, 16, 01, 174 தீர்வு காணப்பட்டது.