திருவெறும்பூர் - Thiruverumbur

திருச்சி: மனைவி மீது பெட்ரோல் ஊற்றிய கணவன்

திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்குனாங்குடி சாலையை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56) விவசாயி. இவரது மனைவி ஹேமா பிந்து (50), மகன்கள் குணசேகர் (20), குருசாமி (20) இவர்கள் இருவரும் பொறியியல் படித்து வருகின்றனர். மகள்களான ஹர்ஷினி இவர் தனியார் மருத்துவ நிறுவனத்தில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். உமா சங்கரி மருத்துவம் படித்து வருகிறார். தாய் பவானி ஆகியோர் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் ஹேமா பிந்துவிற்கு பக்தி மார்க்கம் அதிகமாக இருந்துள்ளது. இது ராஜேந்திர பிரசாத்திற்கு பிடிக்காமல் போயுள்ளது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 19) இரவு 11 மணி அளவில் ஹேமா பிந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர பிரசாத் வீட்டில் வாகனத்திற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர்கள் மீது வீசியுள்ளார்..  அப்பொழுது சாமி அறையில் எரிந்து கொண்டிருந்த தீப விளக்கிலிருந்து அவர்கள் மீது தீ பரவியுள்ளது. இதில் ஹேமா பிந்து மீது தீ பிடித்துள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற மகன்களுக்கும் சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலை வீசிய ராஜேந்திர பிரசாத்திற்கு பெரிய அளவில் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. தீக்காயம் அடைந்த நான்கு பேரையும் வீட்டிலிருந்தவர்கள் வீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஹேமா பிந்துவும் ராஜேந்திர பிரசாத்தும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా