தெலங்கானாவில் அனல் மின் நிலையப் பணி: பெல் நிறுவனம் ஒப்பந்தம்
திருச்சி பெல் நிறுவனமானது தெலங்கானாவில் 3 800 மெகாவாட் திறனுள்ள நிலை-2 சூப்பா் கிரிட்டிகல் அனல் மின்நிலையப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதற்காக என்டிபிசி நிறுவனத்தின் பெரிய ஒப்பந்தத்தில் வெற்றிகரமான ஏலதாரராக பெல் உருவெடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, வழங்கல், நிர்மாணித்தல், கட்டுமானம் ஆகிய பணிகளை பெல் நிறுவனம் மேற்கொள்ளும். சூப்பர் கிரிட்டிகல் அனல் மின்நிலையத்துக்கான பிரதான ஆலைத் தொகுப்பின் அடிப்படை பொறியியல் பணிகளைத் தொடங்குவதற்கான அறிவிப்பை என்டிபிசி நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இந்தத் திட்டம் என்டிபிசி உடனான பெல் நிறுவனத்தின் நீடித்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துகிறது.