திருவெறும்பூர் - Thiruverumbur

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்..2 பயணிகள் கைது

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்..2 பயணிகள் கைது

திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.  இதைத்தொடர்ந்து அவரிடம் இமிகிரேசன் அதிகாரி தொடர்ந்து விசாரணை நடத்திய போது திருச்சி தில்லைநகர் தென்னூர் இதயாத் நகரை சேர்ந்த சிராஜுதீன் (53) என்பதும், இவர் தனது பிறந்த தேதி மற்றும் தாய் பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி பவன் குமார் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார்.  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிராஜ்தீனை கைது செய்துள்ளனர். இதேபோன்று திருச்சி விமான நிலையத்தில் மலேசியா செல்ல இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த அமீர் பாஷா (வயது 50) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்து பார்த்த போது போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது குறித்து இமிகிரேசன் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து அமீர் பாஷாவை கைது செய்துள்ளனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా