திருச்சி திருவெறும்பூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சேர்மராஜ் இவர் கடந்த நான்காம் தேதி தனது வீட்டின் மேஜையில் செல்போனை சார்ஜ் போட்டு வீட்டில் உள்ளே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது செல்போன் காணவில்லை. இதுசம்பந்தமாக சேர்மராஜ் திருவரம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் விசாரணையில் பொன்மலை முன்னாள் ராணுவ காலனியைச் சேர்ந்த முகமது நிஷாந்த் என்பவர்தான் வீட்டுப்புகுந்து செல்போனைத் திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவனை போலீசார் கைது செய்ததோடு அவனிடமிருந்து சேர்மராஜின் செல்போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருச்சி ஆறாவது குற்றநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்தியசிறையில் அடைத்தனர்.