திருச்சி துவாக்குடியில் கஞ்சா விற்ற இருவர் கைது

50பார்த்தது
திருச்சி துவாக்குடியில் கஞ்சா விற்ற இருவர் கைது
திருச்சி துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் வாழவந்தான் கோட்டை பிரிவு சாலை அருகே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ராம்ஜி நகரைச் சேர்ந்த சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் துவாக்குடி டோல் பிளாசா அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த பெரியார் நகரைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி