திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பாரதியார் தெருவைச் சேர்ந்த பொ. சுந்தர்ராஜ் (37) என்பவரின் மனைவியுடன், அரியமங்கலம் முல்லை தெருவைச் சேர்ந்த பா. நிசாந்த் (எ) பன்னீர்செல்வம் அடிக்கடி பேசி வருவதை சுந்தர்ராஜின் தந்தை பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் நிசாந்த் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து பொன்ராஜை கொலை செய்துள்ளார்.
இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் நிசாந்த் (எ) பன்னீர்செல்வம் பொதுமக்களின் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், நிசாந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.