திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யபிரியா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி இ.பி. சாலையில் உள்ள தியேட்டர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த திருவெறும்பூர் குட்டைச்சாலையைச் சேர்ந்த சண்முகம் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.