திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியில்
திடீரென்று சாட்டையால் அடித்துக் கொள்வது, போன்ற தினசரி ஏதேனும் ஒரு டிராமா அண்ணாமலை செய்து வருகிறார், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதியை குறைக்க மாட்டோம் என கூறியிருந்தாலும் தொகுதி எண்ணிக்கை உயர்த்தும்போது, மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கை உயர்த்தினால் மற்ற மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை உயரும்பட்சத்தில் நாடாளுமன்றத்தில் நிஜார் கிடைத்தால் சட்டம் அமல்படுத்துவதில் மற்ற மாநிலங்களின் மெஜாரிட்டி கேட்பதில் அவசியம் கிடைக்காது. தமிழக முதல்வர் எடுத்த தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் இந்த நிகழ்வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பங்கான 7. 2% ஏற்றார்போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சதவீதத்தின் அடிப்படையில் உயர்த்துவாரா அமைச்சர் என கேள்வி எழுப்பினார்,
தமிழகத்தில் மதவாத சக்திகள் வேரூன்றி விடக்கூடாது என்ற ஒரே காரணம் அதனால் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளோம், எட்டாவது ஆண்டாக இந்த கூட்டணியில் தொடர்கிறோம் இந்த கூட்டணி வலுவாக உள்ளது இந்த கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்தார்