டிஎன்பிஎஸ்சி தேர்வு திருவிழா

79பார்த்தது
டிஎன்பிஎஸ்சி தேர்வு திருவிழா
தமிழகம் முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள, கிராம நிர்வாக அதிகாரி, வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என மொத்தம், 6 344 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெறும் இத்தேர்வில், தமிழக முழுவதும், 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு திருவிழா போல நடைபெறும் இத்தேர்வில், திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, 301 தேர்வு மையங்களில், 85 ஆயிரத்து 747 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும் என்ற அறிவிப்பு காரணமாக, காலை, 8 மணிக்கே தேர்வர்கள் மையங்களின் முன்பு குவிந்தனர்.

தொடர்புடைய செய்தி