திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சோழமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் வயது 23. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்பெண் இவருடைய காதலை நிராகரித்து வேறொருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆனந்தகுமார் சொந்த ஊருக்கு வந்திருந்த போது சோழமா நகரில் உள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தாய் அழித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.